இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி கோபியின் பழைய போட்டோ!
பாக்கியலட்சுமி சீரியலில் அதிக பிரபல்யமானவர் தான் இரண்டு பொண்டாட்டிக் காரன் கோபி. இவரின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
பாக்கியலட்சுமி கோபி
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. பாக்கியலட்சுமி கோபியாக உருவம் பெற்றவரின் உண்மையான பெயர் சதீஷ்.
படிப்பிற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர்.
அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். இவரின் முதல் திரைப்படம் மின்சாரப்பபூவே, மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணப்பரிசு (2), மகாராணி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.
இந்த எல்லா சீரியல்களிலும் நடித்து கிடைக்காத திருப்புமுனை தான் பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்தது. இவரின் உண்மையான பெயர் சதீஷ் என்றாலும் தற்போதும் அனைவரிடமும் கோபியாகத்தான் அறியப்படுகிறார்.
வைரல் போட்டோ
இந்நிலையில் தற்போது இணையத்தில் கோபியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் கோபி குடுமி வைத்துக் கொண்டு நெற்றியில் பெரிய ராமம் அடித்து செல்பி எடுத்து போட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் அடடே நம்ம கோபியா இது எனப் பார்த்து விட்டு இன்னும் கொஞ்ச நாளில் கோபிக்கு பெரிய ராமம் தான் என பதிவிட்டு வருகிறார்கள்.