ட்ரெண்டிங் பாடலுக்கு தாவணி பாவாடையில் மாஸ் காட்சிய பிக்பாஸ் பிரபலம்! அதிர்ந்து போன இணையவாசிகள்
ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு தாவணி பாவாடை கட்டி மாஸ் காட்டிய பிக்பாஸ் சிவினின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் வரை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு பிக்பாஸ் சீசன் 6 ன் மூன்றாவது இடத்தை பிடித்து கொண்டவர் தான் மாடல் சிவின் கணேஷன்.
இவர் ஒரு திருநங்கையாக இருந்தாலும் சிறப்பான கொள்ளைகளை வைத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொணடார்.

ட்ரெண்டிங்கில் இருக்கும் காட்சி
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சிவின் அவருடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்பபோது டான்ஸ் வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து வரும் நிலையில், “மைனர் வேட்டி கட்டி” என்ற பாடலுக்கு வீடியோக்காட்சியொன்றை செய்து பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள்,“ இவரை பார்த்தால் திருநங்கை போலவே தெரியவில்லை”என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.