பாக்கியலட்சுமி செல்விக்கு இவ்வளவு பெரிய மகளா? இத்தனை திரைப்படங்களிலும் நடித்திருக்கிறாரா?
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடித்து வரும் கம்பம் மீனாவின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியலில் பாக்யாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாக பாக்யாவுடனே இருக்கும் செல்வி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
பாக்கியலட்சுமி சீரியல் செல்வி
செல்வியின் நிஜப் பெயர் கம்பம் மீனா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் மட்டும் நடிக்காமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவரின் தனி அடையாளமே வெகுளித்தனமான நடிப்பும், வித்தியாசமான குரலும் தான். ஆனால் இவருக்கென்று மற்றொரு பக்கமும் உள்ளது.
மீனா பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாராம். பின்னர் குடும்பம் வறுமை சூழலை நோக்கிப் போக எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வந்திருக்கிறார்.
பின்னர்தான் பாரதிராஜா இவரை தெக்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.
அதற்குப்பிறகு தமிழில் 75 திரைப்படத்திற்கு அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி, சகுனி போன்ற திரைப்படங்களும் அடங்குகிறது.
இப்படி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சாதித்து வருகிறார் கம்பம் மீனா. இந்நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் இவரின் மகனும் மகளும் இவரை பெரியவர்களா இருக்கிறார்கள். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளாக என ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்.