உங்க பொண்ண மட்டும் பார்க்குறீங்க கோபி! கொந்தளிக்கும் ராதிகா... இனி நடக்க போவது என்ன?
இனியாவை பாடசாலைக்கு பார்க்க சென்று கோபி ராதிகாவிடம் வசமாக சிக்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியா - கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது. தற்போது பாக்கியாவிற்கு துணையாக பழனிசாமி என்ற கதாபாத்திரம் வைக்கபட்டுள்ளது.
40 வயதை தாண்டிய இரு ஜோடிகள் தனது வாழ்க்கைக்கு தேவையான ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா எனும் சுஜித்ராவிற்கு சீரியலில் நிறைய சீன்கள் வைக்கப்படுகிறது. இவர் தான் தற்போது இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
இனியாவை பார்க்க சென்று வசமாக சிக்கிய கோபி
இந்த நிலையில் தற்போது இனியா விருது வழங்குவதற்காக ஒரு விழா பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவிற்கு இனியா தன்னுடைய அம்மாவை மட்டும் அழைக்கிறார்.
இதனால் மனமுடைந்த கோபி தன்னுடைய மகளுக்காக பாடசாலைக்கு வந்து திருட்டுத்தனமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இதனை தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியில் வந்தவுடன் ராதிகாவிடம் வசமாக சிக்கி கொள்கிறார்.
அப்போது, “ இந்த உலகத்தில் உங்களை விட யாரும் இந்த அளவு பொய் கூற மாட்டார்கள்.” என கூறியுள்ளார்.