பிரபுதேவாவுடன் நடிக்கும் பாக்யா! வைரல் புகைப்படங்கள்
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் மவுசு நிறைந்த சீரியல் பாக்கியலட்சுமி தொடர்.
பிரபுதேவாவுடன் இணையும் சுசித்ரா
இத்தொடரில் இப்பொழுது கோபி ராதிகா திருமணம் தான் இணையத்தையே அதிரவைத்துள்ளது. அநியாயமாக பாக்கியா இப்படி ஏமாந்து நிற்கிறாரே என்று ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
என்ன தான் இது சீரியலாக இருந்தாலும் ரசிகர்கள் அதோடு ஒன்றி விட்டனர். பாக்கியாவை தனது குடும்பத்தில் ஒரு ஆள் போல பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ராவிற்கு இப்பொழுதெல்லாம் படவாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்து விட்டது. கன்னடத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுசித்ரா. இதே போல நிறைய படங்களில் நடித்து முன்னேற வேண்டும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.