நடுரோட்டில் அவமானப்படுத்திய பாக்கியா.. பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற கோபி - இறுதியில் அம்மா வைத்த டுவிஸ்ட்!
கோபியை அவமானப்படுத்திய பாக்கியாவை பலி வாங்க கோபி பழனிச்சாமி வீட்டுக்கு போய், அவன் அம்மாவிடம் பழனிச்சாமி பற்றி தவறாக பேசுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
கடந்த எபிசோட்டில், பழனிச்சாமி பாக்கியாவிடம் தன்னுடைய காதலை விளையாட்டுத்தனமாக கூறுகிறார். இந்த விடயத்தை பாக்கியாவே எதிர்ப்பார்க்காத நிலையில், பாக்கியாவை திட்ட வந்த கோபி பார்த்து விடுகிறார்.
வகுப்பறைக்குள் கோபி நுழையும் போது இந்த விடயம் நடந்து கொண்டிருக்கின்றது. பழனிச்சாமி இப்படி ப்ரபோஸ் செய்யும் போது கோபியால் அதனை தாங்க கொள்ள முடியவில்லை.
அப்போது பாக்கியாவிடம் எதுவும் பேசாமல் வெளியே வந்து விடுகிறார். பின்னால் வந்த பழனிச்சாமி கோபி கண்டு வரவேற்கிறார்.
நடுரோட்டில் கடுமையாக சண்டை போடும் பாக்கியா
இந்த நிலையில், ஏற்கனவே கடுப்பிலிருந்த கோபி, பழனியை சரமாறிய திட்டி விட்டு பாக்கியா வழிமறிக்கிறார்.
கடுப்பான பாக்கியா, ஏன் என வினவ, நடுரோடு என கூட பாராமல் பாக்கியா - கோபி கடுமையாக சண்டை போடுகிறார்கள். இதனை அந்த வழியில் வந்த மக்களுடன் பழனிச்சாமியும் பார்க்கிறார்.
வாக்குவாதம் பெரியதாகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் “ என்ன பிரச்சினை..” என கேட்கிறார்.
கணவன் - மனைவி பிரச்சினை ” என கோபி கூற .. “நாங்கள் கணவன் - மனைவி அல்ல..” என பாக்கியா கோபியை மாட்டி விட்டு கிளம்புகிறார்.
பழனிச்சாமியை கோர்த்து விடும் கோபி
பாக்கியாவை பலி வாங்கி பழனியின் வீட்டிற்கு சென்று பழனியின் அம்மாவிடம் பழனிச்சாமியை தப்பாக பேசுகிறார்.
இதனை தொடர்ந்து பழனி அம்மாவும் தன்னுடைய மகன் சார்பாக பேசுகிறார். கோபி இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |