பாட்டியின் சதித்திட்டத்தை உடைத்தெறிந்து எழிலின் காதலை சேர்த்து வைப்பாரா பாக்கியா? விறுவிறுப்பாக நகரும் தருணங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் காதலுக்கு எதிராக நிற்கும் பாட்டியின் சூழ்ச்சியை பாக்கியா கண்டுபிடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
தற்போது பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் இயக்குநர் பல திருப்பங்களை அடுக்கி வருகிறார்.
இதன்படி, முதலில் கோபிற்கும் ராதிகாவிற்கும் இரண்டாவது திருமணம் செய்து வைத்து, சீரியலை பரபரப்பு தருணங்களுடன் டுவிஸ்ட்டாக வைத்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன், ரேஷ்மா ஆகியோர் தங்களின் முழுப்பங்களிப்பை போட்டு நடித்து வருகிறார்கள்.
எழிலின் திருமணம் யாருடன்?
இந்த நிலையில் தற்போது எழிலுக்கும் வர்ஷினிக்கும் திருமணம் செய்து வைக்க பாட்டியும் செழியனும் இரகசியமாக எழிலிடம் பேசி சம்பதிக்க வைத்துள்ளார்கள். இதனால் அவர் காதலித்த அமிர்தாவை விட்டு, வர்ஷினிவுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயங்கர கடுப்பில் இருக்கும் பாக்கியா, எப்படி எழில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பார் என சந்தேகத்தில் இருக்கும் போது அமிர்தா எழிலை பார்க்க வந்துள்ளார்.
இதனை பார்த்த பாட்டி மண்டபத்தை விட்டு வெளியேற்றி அவரை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பியுள்ளார். அப்போது எழில் வந்து அமிர்தாவிடம் உண்மையை போட்டுடைத்துள்ளார். இதனை ஒழிந்திருந்து பாக்கியா கேட்டுள்ளார்.
தொடர்ந்து, பாட்டியின் இந்த சதியை உடைத்தெறிந்து எழிலின் உண்மையான காதலை சேர்த்து பாக்கியா வைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.