பாக்கியாவை பொண்ணு பார்க்க வந்த பழனிச்சாமி! பாதி தூக்கத்தில் மிரண்டு போன கோபி..நடந்தது என்ன?
பாக்கியாவை பொண்ணு பார்ப்பதற்காக பழனிச்சாமி வீட்டிற்கு வருவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பிக்கும் போதிலிருந்து இன்று வரை திருப்பங்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், இந்த சீரியலில் நடிகர் சதீஸின் நடிப்பு பார்ப்பவர்களை அசர வைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பழனிச்சாமிக்காக பார்த்த பெண் பாக்கியா தான் என கோபி நினைத்து கொண்டிருக்கிறார்.
ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி
இந்த நிலையில், பழனிச்சாமி பாக்கியாவை பெண் பார்ப்பதற்காக பாக்கியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது போன்று கனவு கண்டு பாதி தூக்கத்திலிருந்து கோபி மிரண்டு எழும்புகிறார். அப்போது இதனை கவனித்த ராதிகா ஏன் கோபி என்னாச்சி என விசாரிக்கிறார்.
அதற்கு பாக்கியாவிற்கு கல்யாணம் என கூறுகிறார். ஆமாம் கோபி பாக்கியாவிற்கு திருமணம் என்றால் உங்களுக்கு என்ன? என அவர் ஒரு கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு கோபி மாட்டிகிட்டது போல் ஒரு பார்வை பார்க்க ப்ரோமோ டிரெண்டாகி வருகிறது.