புருஷன் இருக்கிற இடத்துல நானும் இருப்பேன்..பையுடன் பாக்கியா வீட்டில் ராதிகா! பரபரப்பான ப்ரோமோ
பாக்கியாவின் வீட்டிற்கு கோபி வந்தால் அவர் கூட தான் நானும் இருப்பேன் என ராதிகாவும் வீட்டிற்கு வந்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கோபி, பாக்கியா, இனியா, எழில், அமிர்தா, ராதிகா, செழியன் என பல கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
குடும்பத்தில் என்ன பிரச்சினை வந்தாலும் மனைவி விட்டு பிரிந்து போய் விட கூடாது என்பதையும் இரண்டாவது திருமணம் குறித்து யோசித்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு எப்படி வாழ்க்கை காத்திருக்கிறது என்பதையும் இயக்குநர் அவர்கள் சிறப்பாக இந்த சீரியலில் கூறி வருகிறார்.
பாக்கியா வீட்டில் ராதிகா
இந்த நிலையில் குடித்து ரோட்டில் படுத்து கிடந்த கோபியை செழியன் மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவிற்கு இந்த விடயம் வறுத்தம் என்றாலும் பிள்ளைகளின் சந்தோசத்திற்காக அவரை வீட்டில் வைத்து கொள்கிறார்கள்.
மேலும் ராதிகாவும் அவரின் அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டு ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கு பையுடன் வந்துள்ளார்.
இந்த விடயம் ரசிகர்கள் உட்பட பாக்கியாவின் வீட்டில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோ பார்த்து இனி டுவிஸ்டுகளுக்கு பஞ்சம் இருக்காது என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.