இனியாவிடம் கெஞ்சிய கோபி! குட்பை என்று கூறி பாக்கியாவுடன் சென்ற இனியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டில் இருந்த இனியா அவருக்கு குட்பை கூறிவிட்டு பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வந்தார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
கோபிக்கு குட்பை கூறிய இனியா
கோபி வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் இனியா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது கோபி இனியாவை அழைத்துச் செல்வதாக கூறியநிலையில், இனியா தனது அம்மாவுடன் தனது வீட்டிற்கு செல்வதாகவும், தன்னிடம் கெஞ்சிய கோபிக்கு குட்பை கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபி கண்ணீர் மல்க நின்றுள்ளார். மற்றொரு புறம் கோபியின் அப்பாவும் ராதிகா வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.