நீ இன்னும் பாக்கியாவை மறக்கலையா? நெத்தியில் அடித்தாற் போல் கேள்வி கேட்கும் நண்பர்..பரபரப்பான தருணங்கள்
பாக்கியாவை மறக்க முடியாமல் கஷ்டப்படும் கோபியின் பதற்றம் பார்ப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் நிலை
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் பாக்கியா- கோபி - ராதிகா மூவரும் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடிப்பதால் இன்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை கரம் பிடித்த கோபிக்கு அடுத்தடுத்து வருபவை எல்லாம் பேரிடியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இவர் குடிப்பழக்கம், நண்பர்களிடம் கடன் வாங்குதல் போன்ற பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகிறார்.
பாக்கியாவை நீ இன்னும் மறக்கலையா?
இந்த நிலையில், பாக்கியாவிற்கு ஜோடியாக பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாக்கியாவிற்கு பழனிச்சாமிக்கும் இடையிலான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
பழனிச்சாமியுடன் ஊர் சுற்றும் பாக்கியாவை பார்த்த கோபி கோபத்தில் கொந்தளித்துள்ளார். இதனை பார்த்த கோபியின் நண்பர்,“ அப்போ நீ இன்னும் பாக்கியாவை மறக்கலையா? என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் கூற முடியாமல் கோபி தடுமாற்றத்தில் இருந்துள்ளார்.
மேலும் பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்குமா? அப்படி என்றால் பாக்கியாவின் நிலை தான் என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.