சம்பந்திக்கு செக் வைத்த பாக்யா- திருட்டுத்தனமாக ராதிகாவை சந்தித்த கோபி.. ரேஷ்மா ரீ-என்றியா?
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா அவருடைய சம்பந்திக்கு செக் வைக்கும் அதே நேரத்தில் கோபி- ராதிகாவை சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. சமூகத்தில் ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களாலும் சாதனை செய்ய முடியும் என்பதனை கருவாகக் கொண்டு சீரியல் நகர்த்தப்படுகிறது.
அந்த வகையில், கோபி, ஈஸ்வரியும் சேர்ந்து இனியாவுக்கு நல்லப்படியாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் ஹோட்டலுக்காக வந்த சுதாகர் அதனை பரிசாக கொடுக்கும்படி, பத்திரம் கொடுத்து கையெழுத்து வாங்கிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவுக்கு அடுத்தடுத்து பிரச்சினை கொடுத்து வருகிறார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபியிடம் புலம்புகிறார்.
சுதாகருக்கு செக் வைத்த பாக்கியா
இந்த நிலையில், பாக்கியாவும் செல்வியும் வங்கிக்கு சென்று தன்னுடைய கடன் பற்றி கேட்க, அவர் அதற்கு 41 லட்சம் ரூபாய் தர வேண்டியது இருக்கு என்று சொல்கிறார்.
அதன்பின்னர், சோகமாக பாக்கியா செல்வியுடன் பேசிக்கொண்டு வரும் போது, “உனக்கே 41 லட்சம் கடன் இருக்கு இனி நீ கடனை அடைப்பியா? இல்லை வேலை கொடுப்பியா..” என செல்வி கேட்கிறாள்.
இதை கேட்ட பாக்யா, “நான் உனக்கும் சரி நம்ம கிட்ட வேலை பார்த்தா யாரையும் நான் அப்படியே விட்டுட மாட்டேன்..” என கூறி விட்டு சுதாகரை பார்க்க புது பிளானுடன் செல்கிறார்.
சுதாகரிடம் என்னுடைய ஹோட்டலை நான், 60 லட்சத்து விலைக்கு கொடுக்கிறேன். தர முடியுமா?” என கேட்கிறார். பின்னர், பாக்கியாவின் ஒரு வழியாக பேசி ஹோட்டலை விற்று விட்டார்.
ராதிகாவை சந்தித்த கோபி
இதனை தொடர்ந்து தோற்று போன மாமனார், பாக்கியாவுக்கும், இனியாவுக்கு என்னென்ன பிரச்சினைகளை உண்டுபண்ணுவார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில், கோபி மீண்டும் ராதிகாவை சந்திக்கும் புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் கோபி பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “மீண்டும் ராதிகா வரபோகிறாரா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
