நடுரோட்டில் ராதிகாவிடம் கெஞ்சும் கோபி! எதிர்பார்ப்பை எகிறவைத்த ப்ரோமோ
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
வீட்டை விட்டு சென்ற கோபி
திருமணமான ஆண் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியுடன் காதல்வயப்பட்டு அதனால் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறும் தொடரே பாக்கியலட்சுமி.
ராதிகாவுடன் காதலில் விழுந்த கோபி, தன்னுடைய மனைவி யார் என்பதை மறைத்து திருமணம் வரை செல்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய தோழி பாக்கியலட்சுமி தான், கோபியின் மனைவி என தெரியவர பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறியது.
பாக்யாவை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த கோபி தற்போது வீட்டை விட்டு வெளியேறியவிட்டார்.
இவருக்கு ராதிகாவும் தனது வீட்டில் இடம் தர மறுத்துவிட அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ராதிகாவிடம் கெஞ்சும் கோபி
இதற்கிடையே அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது, ராதிகா தொடர்ந்து தன்னை ஒதுக்கிக் கொண்டே இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் கோபி.
இருந்தாலும் ராதிகாவுடன் சேரும் விடாமுயற்சியை தொடர்ந்த வண்ணமே இருக்கிறார், நடுரோட்டில் சென்று கொண்டிருக்கும் ராதிகாவிடம், உனக்காக தான் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறுகிறார்.
அதற்கு ராதிகாவோ, கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என ஆறுதல் வார்த்தைகள் கூற கையை பிடித்துக் கொண்டு கதறும்படி காட்சிகள் வெளியாகியுள்ளது.