நீளமான வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை! வியக்க வைத்த மருத்துவர்கள் - தீயாய் பரவும் புகைப்படம்
மெக்சிகோ நாட்டில் பிறந்த பெண் குழந்தைக்கு 2 அங்குல நீளத்தில் வால் இருந்த அதிசய நிகழ்வு முதல் முறையாக மெக்சிகோ நாட்டில் பதிவாகியுள்ளது.
அடிக்கடி குழந்தைகள் விநோதமாக பிறக்கும் செய்திகள் இணையத்தளங்களில் உலாவி வரும்.
தற்போது மெக்சிகோ நாட்டில் 2 இன்ச் நீளம் கொண்ட வாலுடன் பெண் குழந்தை பிறந்திருக்கின்றது.
5.7 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வாலை இரண்டு மாதம் கழித்து வெற்றிகரமாக மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
மருத்துவர்கள் விளக்கம்
வால் ஒன்றை தவிர அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உலகில் 195 பேருக்கு மட்டுமே இவ்வாறு வால் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரு உருவாகும்போது அந்த வால் உருவாகும் பின்னர் அது உள்ளே சென்றுவிடும். அப்படி உள்ளே செல்லாமல் இருப்பதால் இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படுதாக மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.