அடுத்தடுத்து வெடிக்கும் பூகம்பம்.. தலையில் அடிச்சி சத்தியம் செய்யும் கோபி- நடந்தது என்ன?
பாக்கியலட்சுமியில் ராதிகா தலையில் கோபி சத்தியம் செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பெண்களின் தைரீயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பல அடிகளை வாங்கி கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கோபி சில வேலைகளை பார்த்து வருகிறார்.
பாக்கியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாக்கியாவின் வீட்டிற்கு தேவையான சமான்களை ராதிகா வாங்குகிறார்.
சொந்த அப்பா, அம்மா வீட்டில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் அவற்றை வாங்க வேண்டாம் கோபி மறுக்கிறார்.
கடுப்பான ராதிகா
இந்த நிலையில் காரில் அமர்ந்து பாக்கியா விடயத்தில் கோபியை தலையீட வேண்டாம் என ராதிகா கண்டித்து கொண்டிருக்கிறார்.
ஆனால் கோபி அதனை புரிந்து கொள்ளாமல் இப்படி தான் இருப்பேன் என கூறுகிறார்.
தொடர்ச்சியாக கோபி சொன்ன விடயத்தை மீண்டும் மீண்டும் கூறுவதால் கடுப்பான ராதிகா வீட்டிற்கு கிளம்பி போவதாக கூறுகிறார்.
இதனால் பயந்து போன கோபி “ இனி இப்படி செய்ய மாட்டேன்...” என ராதிகாவின் தலையில் சத்தியம் செய்கிறார்.
அத்துடன் இன்றைய நாளுக்கான எபிசோட் நிறைவடைந்துள்ளது. மேலும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் ராதிகாவை பார்த்து ரசிகர்கள் நல்ல விதமாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |