ராதிகாவிடம் மன்னிப்பு கேட்ட பாக்கியா... வில்லத்தனத்தால் கேன்டீன் பறிபோகுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியின் வீட்டை பரித்த நிலையில், ராதிகா தனது பக்கமிருந்து பாக்கியாவிற்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டையால் பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தியுள்ளார்.
நேற்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு வீட்டை எழுதி கொடுக்க பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்தவரை, எழில் எச்சரித்து அனுப்பினார். பின்பு வீட்டிற்கு பெயர்பலகையையும் வைத்து கோபியை கடுப்பேற்றியுள்ளார் எழில்.
சவால் விடும் ராதிகா
தற்போது கேன்டீனில் ராதிகா ஒரு புது சிக்கலை கிளப்புகிறார். தான் ஆர்டர் செய்த தோசையை தவறாக கொடுத்துவிட்டார்கள் எனறு சண்டையிட்டதால், பாக்கியா மன்னிப்பு கேட்கின்றார்.
ஆனாலும் விடாமல் சண்டையை தொடர்ந்த ராதிகா, என்னை வீட்டை விட்டு அனுப்பியது போல இங்க கேன்டீனிலிருந்து உங்களை வெளியில் அனுப்புகிறேன், அது கூடிய சீக்கிரம் நடக்கும் என சவால் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |