பாக்கியலட்சுமி இல்லமாக மாறிய கோபியின் வீடு... அதிரடி காட்டிய பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடமிருந்து பாக்கியா வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ஈஸ்வரிக்கும், ராதிகாவிற்கு அரங்கேறி சண்டையால் வீட்டை விட்டு வெளியேற கூறிய கோபிக்கு பாக்கியா தற்போது பணத்தை கொடுத்த வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார்.
கோபி ராதிகா இருவரையும் வீட்டை விட்டும் வெளியேற்றியுள்ளார். இதனால் கோபி கோபத்தின் உச்சத்தில் பாக்கியாவை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
வீட்டு பெயர் பலகையில் பாக்கியா
தற்போது பாக்கியாவின் பெயருக்கு கோபி வீட்டை பத்திர பதிவு செய்துள்ளார். பின்பு செழியன் குறித்த வீட்டிற்கு பாக்கியலட்சுமி இல்லம் என்ற பெயர் பலகையை மாட்டியுள்ளார்.
இதனை நடந்து வந்த கோபி ராதிகா அவதானித்து பொறாமையில் பொங்கியுள்ளனர். அடுத்து கோபியின் திட்டம் என்ன? பாக்கியாவை எப்படி கஷ்டப்படுத்தப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |