மணப்பெண்ணாக மாறிய பாக்கியலட்சுமி ராதிகா... நெருக்கமாக இருக்கும் நபர் யார்?
நடிகை ரேஷ்மா சமீபத்தில் மணப்பெண்ணாக புகைப்படம் வெளியிட்ட நிலையில், அப்புகைப்படத்திற்கான காரணத்தினை தற்போது கூறியுள்ளார்.
நடிகை ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் வில்லியாக வலம் வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் குறித்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் கதாநாயகனுக்கு இரண்டாவது மனைவியாக நடித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் இவருடைய குணம் அனைவருக்கும் பிடித்திருந்த நிலையில், நாளடைவில் பாக்கியாவின் வாழ்க்கையை தட்டிப்பறித்து கோபியுடன் வாழ்ந்து வருகின்றார்.
மேலும் பாக்கியாவிற்கு பல விதங்களில் டார்ச்சரையும் கொடுத்துவரும் நிலையில், சமீபத்தில் மாமியார் ஈஸ்வரியை வீட்டைவிட்டு வெளியே போகக் கூறினார்.
இதனால் பொங்கி எழுந்த பாக்கிய ஒரு மாதத்திற்கு இந்த வீட்டிற்கான 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிடுவேன்... நீங்கள் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று சவால் விட்டார்.
பாக்கியாவின் சவாலையும் முடித்து பணத்தையும் கொடுத்து முடித்தார். தற்போது ராதிகாவுடன் கோபி நடுத்தெருவிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதிகா திருமண மேக்கப்பில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
திருமண மேக்கப் எதற்காக?
ராதிகாவின் இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக பேசி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை ரேஷ்மா கூறுகையில், பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தியதாகவும், இது தற்போதைய புகைப்படம் இல்லை என்றும் ஒரு ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் Bridal Magazine-க்காக இதனை எடுத்ததாக விளக்கம் கொடுத்தார்.
தொடர்ந்து பேசுகையில், 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள், எனது அடுத்த படமான சத்ய சோதனை வரும் ஜுலை 21ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் காணொளி வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |