சைனஸ், தொண்டையில் பாக்டீரியா தொற்றா? Azithromycin பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
டான்சில், சைனஸ், காது, மூக்கு, தொண்டை, தோல் உட்பட நுரையீரலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த Azithromycin பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு ஆன்டி பயாடிக் ஆகும், பாதிக்கப்பட்ட உறுப்புகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பக்கவிளைவுகள்
வாந்தி
மயக்கம்
அடிவயிற்றில் வலி
வயிற்றுப்போக்கு
இது பொதுவான பக்கவிளைவே, முகம்/தொண்டையில் வீக்கம், தோலில் அரிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற தீவிரமான பக்கவிளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
எந்தவொரு மருந்தையும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
இதய நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் இதுகுறித்து தெரிவிக்கவும்.
உணவுடன் எடுத்துக்கொண்ட 2 மணிநேரங்களுக்கு பின்னர் அல்லது உணவு சாப்பிடும் 1 மணிநேரத்துக்கு முன்னர் எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவர் கூறிய அளவுகளில் மட்டுமே எடுக்கவும், அளவுக்கு அதிகமாக அல்லது தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம்.
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Azithromycin யை தாராளமாக பயன்படுத்தலாம், எனினும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
Azithromycin எடுத்துக்கொண்ட மூன்று நாட்களில் நிவாரணம் கிடைத்துவிடும், ஒருவேளை தொந்தரவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
கெட்ட பாக்டீரியாக்களை கொல்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம், தொடர்ந்து அதிகமான வயிற்றுப்போக்கு இருந்தால் மருத்துவரை நாடவும்.