பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் Amoxicillin பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பல்வேறு வகையான பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த Amoxicillin பயன்படுத்தப்படுகிறது, இது பெனிசிலின் வகையை சார்ந்த ஆன்டி பயாடிக் ஆகும்.
பாக்டீரியாக்கள் வளர்வதை இது தடுப்பதால் நோய்களை குணப்படுத்துகிறது, வைரஸ் தொற்றுகளை எதிராக இது பயன்படாது.
பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் அல்சர் புண்களுக்கும் கூட மருந்தாகும்.
பக்கவிளைவுகள்
தோலில் அரிப்பு
வாந்தி
வயிற்றுப்போக்கு
அலர்ஜி
அடிவயிற்றில் வலி
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களுக்கு மட்டும் Amoxicillin மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
அடிவயிற்றில் கடுமையான வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு இருந்தாலோ, கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
தோலில் அரிப்பு, முகம் மற்றும் கழுத்து வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
முக்கிய கவனத்திற்கு
எந்தவொரு நோய்க்கும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே, இதே போன்று Amoxicillin மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பெனிசிலின் மருந்து அலர்ஜியாகும் நபர்களுக்கு Amoxicillin மருந்தும் அலர்ஜியாகும், எனவே உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Amoxicillin மருந்துகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும், எனினும் இது நன்மை தரும் பாக்டீரியாக்களையும் அழிக்க நேரிடலாம், எனவே வயிற்றுப்போக்கு தொடர்ந்தால் மருந்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
மருந்துகளை எடுக்கத்தொடங்கியவுடன் 2 அல்லது 3 நாட்களில் நிவாரணம் கிடைத்துவிடும், எனினும் மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் முழுமையும் எடுத்துக்கொள்ளவும்.
Amoxicillin எடுத்துக்கொள்வதால் கருத்தடை மாத்திரைகளின் செயல்திறன் குறையக்கூடும், இதுதொடர்பாகவும் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?
சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்கவும் அல்லது மருத்துவர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.
பென்சிலினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றால், Amoxycillin மருந்துகளை எடுத்துக்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், இதுவும் அதே வகையை சேர்ந்த ஒன்றே.
சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபராக இருப்பின், அதைப்பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.