பிறப்புறுப்பில் அரிப்பு உட்பட தோல் நோய்கள்: Clotrimazole Cream எதற்காக பயன்படுகிறது?
ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் பூஞ்சை தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்தப்படும் க்ரீம் Clotrimazole.
Trichophyton என்ற பூஞ்சைக்கு எதிராக திறம்பட செயல்படக்கூடியது.
பயன்கள்
பெண்களின் பிறப்புறுப்பு, யோனி பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல், வாய்ப்புண், பித்த வெடிப்பு, அரிப்பு போன்ற இன்னும் பல பூஞ்சை தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது பூஞ்சையின் உயிரணு சவ்வை அழிப்பதன் மூலம் அதன் வளர்ச்சியைக் கொன்று நிறுத்துகிறது, இதன் மூலம் உங்கள் தோல் தொற்று குணமாகும்.
பக்கவிளைவுகள்
தோல் உரிதல்
வீக்கம்
கொப்புளங்கள்
பயன்படுத்திய இடத்தில் எரிச்சல்
மிக முக்கியமாக இதிலுள்ள ரசாயனங்களை தெரிந்து கொண்டு, அதில் ஏதேனும் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இதுதவிர பக்கவிளைவுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
கர்ப்பிணிகள், கர்ப்பம் தரிக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.
கல்லீரல் நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபர்கள் பயன்படுத்தக்கூடாது.
SCOTT CAMAZINE/GETTY IMAGES
வேறு ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ, உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலோ மருத்துவரிடம் கண்டிப்பான முறையில் தெரியப்படுத்த வேண்டும்.
முக்கிய கவனத்திற்கு
Clotrimazole Creamயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு தொற்று குணமானதாக தெரிந்தாலும், மருத்துவர் கூறிய நாட்களுக்கு கண்டிப்பான முறையில் பயன்படுத்துங்கள்.
பாதிக்கப்பட்ட இடங்களில் தேவையான அளவு Clotrimazole Creamயை தடவிக்கொள்ளுங்கள்.
கண்கள், மூக்கு மற்றும் வாயில் படாதபடி பார்த்துக் கொள்ளவும், ஒருவேளை தெரியாமல் பட்டுவிட்டால் உடனடியாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிடுங்கள்.
நான்கு வாரங்களுக்கு மேலாக தொந்தரவுகள் சரியாகாதபட்சத்தில் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
BSIP/UIG/GETTY IMAGES
தீப்பட்ட காயங்களின் மீது Clotrimazole Creamயை பயன்படுத்த வேண்டாம்.
Clotrimazole Cream பயன்படுத்தும் முன் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும், உதாரணத்திற்கு காலில் உள்ள தொற்றுக்காக இதை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நன்றாக காலை கழுவிவிட்டு உலரவைத்த பின்னர் க்ரீமை தடவவும்.
க்ரீம் பயன்படுத்த தொடங்கிய ஒருசில நாட்களில் எரிச்சல், அரிப்பு நின்றாலும், மருத்துவர் பரிந்துரைத்த நாட்களுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு தாராளமாக இதனை பயன்படுத்தலாம், சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
பெண்களின் பிறப்புறுப்பில் முறையான சாதனத்தோடு Clotrimazole பயன்படுத்துகிறீர்கள் என்றால் 72 மணிநேரத்துக்கு உடலுறவு கொள்வதை தவிர்க்கவும்.
ஆண்களின் உறுப்புகளில் பயன்படுத்துவதாக இருந்தால் 5 நாட்களுக்கு மாற்று கருத்தடை முறைகளை பின்பற்றவும், ஏனெனில் இது கருத்தடை சாதனங்களின் செயல்திறனை குறைக்கலாம்.