பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த பகை: விக்ரமனை மறைமுகமாக தாக்கிய அசீம்
அண்மையில் விக்ரமன் பற்றிய சர்ச்சையொன்று வைரலாக பரவ அதற்கு அசீம் போட்ட பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் விக்ரமன்
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடி முடிந்தது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் விக்ரமன். இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருபவர்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாகவும் இருப்பார். அதுமட்டுமல்லாமல் அறம் வெல்லும் என்று சொல்லி அசீமுடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.
இந்த வாக்குவாதங்களை முறியடித்து வெற்றிப் பெறுவார் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமான இருந்த விக்ரமனை பின்னுக்கு தள்ளி வெற்றிப் பெற்றுக் கொண்டார் அசீம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தலைக்காட்டாமல் இருந்த விக்ரமன் தற்போது 15 பெண்களை ஏமாற்றியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
மறைமுகமாக தாக்கிய அசீம்
இந்நிலையில், விக்ரமன் பற்றிய செய்திகள் தற்போது அதிகம் பரவி வர பிக்பாஸ் வீட்டில் விக்ரமிற்கு போட்டியாக இருந்த அசீம் ஒரு பதிவொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவு அப்படி விக்ரமன் பக்கம் திரும்பியது போல இருக்கிறது. குறித்த பதிவில்,
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் (என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும்) என்று தனது புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனைக் கவனித்த நெட்டிசன்கள் விக்ரமன் தாக்கப்பட்டார் எனவும் அசீம் விக்ரமனை மறைமுகமாக தாக்கி விட்டார் என்றும் கருத்துக்களைப் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |