அறம் வெல்லும் விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன செய்கிறார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிவரைச் சென்ற கமலின் பிரியமான போட்டியாளர் விக்ரமன் தற்போது குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன். இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.
அதிலும் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பாரக்கப்பட்டிருந்தது. பிக்பாஸ் மேடையிலும் இவருக்கு ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகி இருந்த வேலையில் டைட்டில் வின்னராக அசீம் கோப்பையை பெற்றதும் விக்ரமனுக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாகி இருந்தது.
குழந்தைகளுக்கு கருத்தரங்கு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சில சில பிரச்சினைகளில் தலைக்காட்டிய விக்ரமன் தற்போது அறம் வெல்லும் பவுண்டேசன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு ஒன்றை நடாத்தியிருக்கிறார்.
இந்த கருத்தரங்கிற்கு தன் சக போட்டியாளர்களான ஏ.டி.கே மற்றும் ராம் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துக் கொண்டிருந்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |