ஆவேசத்தில் வார்த்தைகளை அள்ளி வீசும் அசீம்! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சோகம்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டாலும், அசீம் குறித்த சர்ச்சை மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் டைட்டில் வின்னராக ஆகியதோடு, பரிசு பணத்தையும், காரையும், கோப்பையையும் தட்டிச் சென்றார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே விக்ரமனிடம் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இந்த வாதம் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது.
சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் பிரபல ரிவியில் நடந்த நிலையில், அப்பொழுதும் கூட நேருக்கு நேர் விக்ரமனை தாக்கி பேசினார் அசீம்.
பிக்பாஸ் வீட்டிலும் கூட தான் கோபப்படுவதைத் தவிர மற்ற எந்தவொரு தவறும் என்மீது கிடையாது என்று கூறி வருகின்றார்.
அசீமின் சர்ச்சை பேச்சு
பிக்பாஸ் முடிந்து பல சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் அசீம், சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் வெற்றி பெரும் எனது நண்பன் மணிகண்டன், உடன் பிறவா சகோதரி அசீம், ஆயிஷா, எனது தம்பி அசல் கோலார் இவர்கள் எல்லாரும் ஒரு உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு இருந்தனர்.
ஆனால் அதே கூட்டத்தில் கைய பின்னாடி கட்டிட்டு இருந்தவங்களையும் நான் பார்த்தேன். ஏன்னா நம்ம உள்ள இருக்கும் போது பயந்து பேசுற ஆளில்ல. வெளியே இருக்கும் போது கேட்கவா வேணும் என்று பேசியுள்ளார்.
எனது கேபத்தை மட்டுமே குற்றமாக கூறப்படும் நிலையில், மற்றவர்கள் போன்று புறம் பேசியது இல்லை... நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும்... நான் முகமூடி போட்டு எல்லாம் உள்ள போகல. ஆனா, உள்ள இருக்கிற பல முகமூடிய கிழிச்சிருக்கேன்.
ஒரு சிலர் சொன்னாங்க மக்கள் புத்திசாலி ஆனவங்கன்னு. டேய், மக்கள் புத்திசாலியானதுனால தான்டா என்னை ஜெயிக்க வெச்சாங்க" என தெரிவித்தார்.