கமல்ஹாசனை இப்படி சொன்னாரா அசீம்? எழுந்த சர்ச்சை
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ன் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார் அசீம்.
இவரது வெற்றியை சிலர் கொண்டாடினாலும் பலரும் விமர்சித்து வருகின்றனர், இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என பிக்பாஸ் போட்டியாளர்களே விமர்சித்து வருகின்றனர்.
மிக கோபத்துடனும் அசீம் நடந்து கொண்டவிதம் பலரையும் முகம் சுழிக்கவைத்தது, இவர் எப்போதுமே இப்படித்தான் என அவருடன் நடித்த சக நடிகர், நடிகைகள் கூட பேட்டிகளில் தெரிவித்தனர்.
கமல்ஹாசன் அவர்களும் வாரஇறுதி நாட்களில் அசீம் நடந்து கொண்ட விதம் குறித்து பேசினார்.
இந்நிலையில், பிக்பாஸ் டைட்டில் வென்று வெளியே வந்தபின், இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அசீம், 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி கோபப்பட்டு நடந்துக்குறீங்களே இதை பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாரு. ஏன் டா என் மகனுடன் நான் நேரத்தை செலவளிக்கு பல்லாயிரம் நாட்கள் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை பார்த்து தான் என் மகன் வளரணும் என்று எந்த அவசியமும் இல்லை' என பேசியுள்ளார் அசீம்.
இது கமல் ஹாசன் தாக்கி தான் அசீம் பேசியுள்ளார் என சமூக வலைதளத்தில் கூறப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பலரும் அசீம் மிகவும் தவறான முறையில் பேசியுள்ளார், இதை நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது தைரியமாக அவர் பேசியிருக்கலாமே, ஏன் பேசவில்லை என்றும் கேட்டு வருகிறார்கள்.