தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் அயலான்...
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் ஒருவரான சிவகார்த்திகேயன், நடிப்பில் அண்மையில் வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான்.
இத் திரைப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
image - Times of india
இந்நிலையில் இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரமொன்றும் 4500க்கும் மேற்பட்ட விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்களை இந்தத் திரைப்படத்தில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image - India Posts English