சிக்கன்ல சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
அசைவ உணவு என்றாலே அதில் சிக்கனுக்குத்தான் முதலிடம். அசைவ விரும்பிகளின் முதல் தெரிவும் சிக்கன்தான்.
அந்த வகையில் சிக்கன் சமைக்கும்போது பல்வேறு விடயங்களை கவனித்தில் கொள்ளவேண்டியது முக்கியம். ஏனென்றால் ஒழுங்காக வேகவைக்காவிட்டால் சிக்கன் ரப்பர் போல் இருக்கும். அதிகமாக வேகவைத்தால் பஞ்சு போல் ஆகிவிடும்.
சரி இனி சிக்கனை வாங்குவது முதற்கொண்டு, சமைக்கும் வரையில் என்னென்ன செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
image - great british chefs
ப்ரெஷ்ஷான சிக்கன் - எப்பொழுதுமே ப்ரெஷ்ஷான சிக்கனை வாங்கி அதனை சமைத்தால் மாத்திரமே சுவையான சிக்கனை பெற முடியும்.
எலும்பை புறக்கணித்தல் - எலும்பில்லாத கோழி துண்டுகளை வாங்குவதை விட எலும்புள்ள சிக்கனை வாங்க வேண்டும்.
கழுவுதல் - சிக்கனை கழுவுவது அதிலுள்ள பக்டீரியாக்களை விரட்டும் ஒரு செயன்முறையாகும். கோழியை கழுவிய பின்னர் அதன் மேற்பரப்பை சரியாக சுத்தம் செய்யாதபோது பக்டீரியாக்கள் எளிதாக பரவும்.
image - women's health
தோல் - சிக்கனை தோலுடன் சமைக்க வேண்டும். தோல் இறைச்சியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும் உள்ளே மென்மையாகவும் மாற்றும்.
வெவ்வேறு அளவுகள் - அனைத்து கோழித் துண்டுகளும் சம அளவில் இருக்கவேண்டியது முக்கியம்.
மூடாமல் சமைப்பது - சிக்கன் சமைக்கும்போது பாத்திரத்தை மூடவேண்டும். அப்பொழுதுதான் அதிலிருந்து வெளிவரும் நீராவி இறைச்சிக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.