ஒயில் புல்லிங் நன்மைகள் இதோ...
ஒயில் புல்லிங் என்பது வாயில் எண்ணெயை ஊற்றி கொப்பளிப்பது ஆகும். இது நமது முன்னோர்களால் பாரம்பரியமாக செய்யும் ஒரு பழக்கமாகும்.
ஆனால், இது தற்போது பிரபலமாகிவ வருகிறது. இது ஈறு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கு ஒரு பாரம்பரிய தீர்வாக காணப்படுகிறது.
அதாவது, 15 முதல் 20 நிமிடங்களுக்கு மவுத் வோஷ் செய்வது போல எண்ணெயை சுத்துவது இந்த முறையாகும். இது கெட்ட பக்டீரியாக்களை குறைப்பதோடு வாய் துர்நாற்றத்தையும் தடுக்கின்றது.

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு எண்ணெய் கொப்பளிப்பது மிகவும் நல்லது. இதைச் செய்வதால் வாயில் பக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும்.
வாய் ஆரோக்கியம் உமிழ்நீரில் உள்ள கெட்ட பக்டீரியாக்கள் மற்றும் வெண்மையான படிமத்தை கணிசமாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிறந்த எண்ணெய் தெரிவு சிறந்த ஒயில் புல்லிங்கை தொடங்கும்போது நல்ல தரமான சமையல் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
20 நிமிடங்கள் வரையில் ஒயில் புல்லிங் செய்ததன் பினனர் துப்பிவிடவும். காலை எழுந்ததும் வாயில் எண்ணெய் ஏற்றி 10 நிமிடங்கள் வரையில் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவுதான் ஒயில் புல்லிங்.