வீட்டில் செம்பு பாத்திரத்தை சுத்தப்படுத்த சிரமப்படுகிறீர்களா? வெறும் 5 நிமிடத்தில் நிகழும் அதிசயம்
காப்பர் (Copper) பாத்திரங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதாவது, காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது மற்றும் உணவு அருந்தும் போது, உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறையும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் புற்றுநோயின் ஆபத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை நமக்கு கொடுக்கிறது.
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் காப்பர் பாத்திரங்களின் பயன்பாடு இருந்தது. இது நாளடைவில் மாறி இன்று பிளாஸ்டிக் குடங்கள், கேன்களில் தண்ணீர் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.
எனவே, இன்றைய நவீன காலத்தில் இந்த செம்பு பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கத்தை நீங்களும் உங்கள் வீட்டில் கொண்டு வருவது ரொம்பவே நல்லது.
உங்க வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் செம்பு டம்ளர், செம்பு அண்டா, செம்பு ஜக், உள்ளிட்ட காப்பர் பாத்திரங்களை பராமரிப்பது ரொம்பவே கடினம். ஏனெனில், பித்தளையை காட்டிலும் செம்பானது மிக விரைவாகவே கருப்பு நிறம் கொண்டு விடும்.
அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் ரொம்பவும் கறுத்துப் போய் மங்கி காணப்படும். எனவே, இத்தகைய செம்பு பாத்திரங்களை ஐந்தே நிமிடத்தில் பளபளப்பாக புதுசு போல மாற்ற சிம்பிள் டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எவ்வாறு சுத்தம் செய்யலாம்?
லெமன், உப்பு , புளி பயன்பாடு மட்டும் இதற்கு போதும். பாதி லெமனை வெட்டி அதில், புளி சேர்த்து சால்ட் உப்பை தொட்டு காப்பர் பாத்திரத்தை தேய்த்தால் 5 நிமிடத்தில் பளிச்சென மாறும்.
செம்பு பாத்திரங்கள் நிறம் மங்க ஆரம்பித்தவுடன் அதை தண்ணீர் எதுவும் படாமல் டிரை ஆக காய வைத்து எடுத்து அதில் நன்கு புளித்த தயிரை பூச வேண்டும். புளித்த தயிரில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் செம்பு பாத்திரத்தை பளிச்சிட வைக்கும். 10 நிமிடம் கழித்து சாதாரண ஸ்கிரப்பர் கொண்டு பாத்திரத்தை தேய்த்து பார்த்தால் பளிச்சென மாறும்.
நம்முடைய முன்னோர்களின் காலங்களில் குளங்களில் செம்பு காசுகளை போட்டு வைப்பார்கள். இதனால் குளத்தில் இருக்கும் நீர் மூலிகை நீராக மாறும். இதை பயன்படுத்தும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்குமாம்.
image: south Indian food