தினமும் சிக்கன் சாப்பிடலாமா? அதையும் மீறி சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் சந்திக்க நேரிடும்
அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன்தான். அதற்கு காரணம் அதன் சுவையும், விலை மலிவாக கிடைப்பதும் தான். சிக்கனை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலனோர் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், சிக்கனை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
சிக்கனை முதலில் சூடேற்றி சாப்பிடவேண்டும். உதாரணமாக க்ரில் அல்லது ரோஸ்ட் முறையில் செய்து சாப்பிடலாம். சிக்கனில், அதிகளவும், புரோட்டினும், கலோரிகளும் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் சாப்பிட்டு வரலாம். சிக்கனை உடல் எடை 65 முதல் 75 கிலோக்குள் இருந்தால் நீங்கள் தினமும் 200 கிராம் சிக்கனை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
சிக்கன் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை அதிகளவில் வெளியேற்றுகிறது. மேலும், சிக்கன் மன அழுத்தத்தை போக்கவும், ம்கிழ்ச்சிக்கான ஹார்மோனான செரோடோனின் அளவை அதிகரிப்பதால் உங்கள் மனநிலையை எளிதில் மாற்றிவிடும். மேலும், சிக்கன் நரம்பியல் பிரச்சினைகள சரிசெய்யவும், இரத்த செல்கள் பாதிப்பு அடைவதை தடுக்கவும் உதவுகிறது.
கடைசியாக அளவிற்கு அதிகமாக சிக்கனை சாப்பிடாலும் ஆபத்துதான். தினமும் சிக்கன் சாப்பிடுவது தவறல்ல, ஆனால் சாப்பிடும் அளவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வாரத்திற்கு மூன்று முறை தாராளமாக சிக்கன் சாப்பிடலாம்.
