சர்க்கரையை அதிகமாக எடுத்துக்கொள்பவரா நீங்கள்? பெரும் ஆபத்து ஜாக்கிரதை
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சர்க்கரை அளவும் இருக்கின்றது. ஒருவகையான மாவுச்சத்தாக இருக்கும் சர்க்கரையை நாள்தோறும் நாம் உண்ணும் உணவில் எடுத்துக் கொள்கின்றோம்.
இவை பெரும் ஆபத்தினை ஏற்படுத்தினாலும், சிலர் சர்க்கரை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அவ்வாறு நாம் தவிர்த்து வந்தாலும், இயற்கையாகவே இனிப்பு கொண்ட பழங்களில் இருக்கும் சர்க்கரையை நாம் சாப்பிட்டு தான் வருகின்றோம்.
இவ்வாறு இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்களை நாம் ஒதுக்கிவிட்டோம் என்றால் உடலில் ஆற்றல் கிடைப்பதில் கடினமாகி விடுகின்றது. ஆதலால் வயதுக்கு ஏற்ப சர்க்கரையின் அளவினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையை அதிகமாக சேர்த்தால் என்ன பிரச்சினை?
நீங்கள் சர்க்கரையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையையும், புற்றுநோய் பிரச்சினையையும் சந்திக்க நேரிடும்.
மேலும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது. உலகெங்களிலும் மெல்ல மெல்ல மனிதர்களை கொன்று வரும் நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க சர்க்கரையை அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுவயதில் இருக்கும் குழந்தைகளின் பற்களில் சிதைவு காணப்படும். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் அதிகளவில் இனிப்பு சாப்பிடுவதே. ஆம் இனிப்பில் இருக்கும் பாக்டீரியா பற்கள் மற்றும் ஈறுகளில் சிதைவினை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் உடம்பில் கொழுப்பு அதிகமாவதுடன், ரத்த அழுத்தம் பிரச்சினை, இதய ஆரோக்கியத்தில் சிக்கல் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஆனால் சர்க்கரை அதிகமாக சேர்ப்பவர்களுக்கும், கல்லீரலில் கொழுப்பு அடைய காரணமாவதுடன், கல்லீரல் முழுவதுமாக செயலிழக்கவும் செய்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.