வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்!

Banana
By Rooban Jul 30, 2022 11:10 AM GMT
Rooban

Rooban

Report

தினமும் ஒரு வாழைப்பழத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது உங்கள் உடலை செல் மற்றும் திசு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது 7000-ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது.

இந்த சத்தான பழம் உலகின் அனைத்து இடங்களிலும் நம் சாப்பாடு தட்டில் இடம் பிடித்துவிட்டது.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

தினமும் ஒரு வாழைப்பழம்

வாழைப்பழம் மிக எளிதாக கிடைப்பதால் உலகில் மிக அதிகமாக சாப்பிடும் பழமாக உள்ளது.

வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது.

உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல வகையான வாழைப்பழங்களில், மையத்தில் வழங்கப்படும் பொதுவான சில வகைகள் இங்கே...

  • கிராண்ட் நைன்
  • கர்பூரவள்ளி
  • நேந்திரன்
  • பச்சநதன்
  • பூவன்
  • செவ்வாழைப்பழம்
  • ரஸ்தாலி
  • ரோபஸ்டா
  • மலை வாழைப்பழம்

உங்களுக்கு வாழைப்பழத்தின் சுவை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். வெளிச்சூழ்நிலை விஷயங்களான நம் உணவு பழக்கம், மூளையின் வேதியியலில் தாக்கம் உண்டாக்கி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் உணர்வுகளை உருவாக்குகிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பழமானது நோய் எதிர்ப்பு அமைப்பு வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை தருகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாகிறது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது.

ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.

மேலும், தினசரி அளவில் தேவையான 11 சதவிகிதம் வைட்டமின் சி சத்தை ஒரு வாழைப்பழம் கொடுக்க முடியும்.

இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய அவசியமானது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பழுத்த வாழைப்பழங்களை நாடுங்கள். 

இதயத்தை காக்கும்

பொட்டாசியம் நம் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு தேவையான மினரல் கனிம எலெக்ட்ரோலைட் ஆகும்.

ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றும் இதய செயல்பாடு, திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

பொட்டாசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உட்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட காரணமாகிறது.

மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம்.

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது. 

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

மாதவிலக்கு சரிசெய்யும்

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

அதேப்போல், இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம்.

உடலுக்கு பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம். கொஞ்சம் வாழைப்பழங்களை உண்பதால் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அளவை திறன்பட சமன்செய்ய முடியும்.

பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 சிவப்பு ரத்த அணுக்களை தயாரிக்கிறது, இது மாதவிடாய் காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது. 

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

உடற்பயிற்சிக்கான உணவு

ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் 12மி.கி. கோலைன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைட்டமின் பி வகையைச் சேர்ந்த கோலைன், உடலில் கொழுப்பை சேமித்து வைக்கும் மரபணு மூலக்கூறுகளில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.

நீண்ட தூரம் ஓடுபவர்கள் (மாரத்தான்) மற்றும் இதர உயர் சகிப்புத்தன்மை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அதில் நல்ல மாவுச்சத்து உள்ளது.

மேலும் அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது. எளிதாக ஜீரணமாகக்கூடிய சர்க்கரை, உடலுக்கு தேவையான சக்தியை நேரடியாக கொடுக்கும்.

நம் உடலில் செல்கள் கொழுப்பை கிரகித்துகொள்வதைக் குறைக்கக்கூடிய பெக்டின் என்ற சத்தின் நேரடி மூலமாக வாழைப்பழங்கள் உள்ளன.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

எலும்புகளை வலுப்படுத்தும்

ஆரோக்கியமான எலும்புகளைப் பற்றி யோசிக்கும்போது, மனதுக்கு வரும் முதல் விஷயம் கால்சியம் சத்து.

வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலில் கிரகித்துக்கொள்ள வேண்டிய கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து நம் எலும்புகளுக்கு நல்லது. அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவை உட்கொள்ளும் மக்களுக்கு ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தி அதிகம் இருக்கும். 

எளிதாக கிடைக்கும்

பழம் வாழைப்பழங்கள் கிட்டத்தட்ட உலகின் அனைத்து சந்தைகளிலும் மலிவான விலையில் கிடைக்கும்.

வாழைப்பழத்தின் கனத்தத் தோல், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேறு சில பாதிப்பு தரும் ரசாயனங்கள், மென்மையான மற்றும் சுவையான உள் சதைப்பற்றை மாசுபடாமல் காக்கிறது.

மேலும் பல இடங்களுக்கு எளிதாக எடுத்துச்சென்று சேர்க்க முடிகிறது. சுலபமாக கிடைக்கும் தன்மையும், பல்வேறு பலன் தரும் பழமாக இருப்பதும் இணைந்து இதை ஓர் மிகச்சிறந்த சிற்றுண்டியாக்குகிறது. 

நன்மைகள்

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும்.

தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

செவ்வாழையின் நன்மைகள்

செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம், சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது. இந்த செவ்வாழை பழத்தினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நோயானது விரைவில் குணமாகும்.

அதிக உடல் எடை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பழத்தினை தாராளமாக உண்ணலாம்.செவ்வாழை பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.

இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும். நாம் தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அதிகமாக செவ்வாழை எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் பிரச்சனையானது சீராக இருக்கும். 

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

பூவாழையின் நன்மைகள்

பூவன் வாழைப்பழமானது எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று. இந்த பூவன் பழமானது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

பூவன் வாழைப்பழத்தினை உணவிற்கு பிறகு தினமும் 1 பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்.

மேலும் மூல நோய் உள்ளவர்கள் இந்த பழத்தினை எடுத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

ரஸ்தாளி வாழைப்பழம்

ரஸ்தாளி வாழைப்பழமானது அதிகம் சுவை கொண்டவை. கண்களில் ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

இந்த ரஸ்தாளி பழம் மேலும் இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுவுடன் தென்படும்.

இதயம் சம்மந்த நோய் உள்ளவர்கள் இந்த ரஸ்தாளி வாழைப்பழத்தினை சாப்பிட்டு வர இதய நோய் அனைத்தும் குணமாகும்.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

பேயன் வாழைப்பழம்

உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பத்தன்மை நீங்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

தொடர் வயிற்று வலி மற்றும் குடல் புண் உள்ளவர்கள் தினமும் 1 பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

பச்சை வாழைப்பழம்

குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த பச்சை வாழைப்பழம். கோடை கால நேரத்தில் நம் உடலானது மிகவும் வெப்ப தன்மை அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக இருக்கும்.

உடலில் இரத்தம் சம்பந்த அனைத்து நோய்களையும் சரி செய்கிறது இந்த வாழைப்பழம். குறிப்பாக வாதம் நோய் உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. 

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

கற்பூரவள்ளி வாழைப்பழம்

கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூட்டை தனித்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

இந்த கற்பூரவள்ளி வாழைப்பழமானது மிகவும் இனிப்பு சுவை கொண்டது. இந்த பழமானது ஜீரண கோளாறுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

நேந்திர வாழைப்பழம்

நேந்திர வாழைப்பழமானது நமது உடலிற்கு அதிக இரும்புச்சத்தை கொடுக்கக்கூடிய அற்புதமான பழ வகையாகும்.

நேந்திர வாழைப்பழத்தை நாம் பச்சையாகவும், அல்லது அவியல் செய்தோ, சிப்ஸ் முறையிலும் கூட இந்த பழத்தினை சாப்பிட்டு வரலாம்.

மேலும் இந்த நேந்திர வாழைப்பழத்தில் அதிகம் புரதச்சத்து உள்ளது.

நேந்திர வாழைப்பழத்தினை சாப்பிட்டு வருவதால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி விடும்.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

மொந்தன் வாழைப்பழம்

மொந்தன் வாழைப்பழம் சாப்பிட்டுவர உடலில் அதிகமாக இருக்கும் வறட்சி தன்மை நீங்கிவிடும். மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் வராமல் தடுத்து நிறுத்தும்.

உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா? வாழைப்பழம் செய்யும் அற்புதம்! | Banana Benefits In Tamil

கதலி வாழைப்பழம்

கதலி வாழைப்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.

இதனால் நம்முடைய செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.  

3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Épinay-sur-Seine, France

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, மன்னார்

10 Dec, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோண்டாவில் கிழக்கு

07 Dec, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

அநுராதபுரம், மீசாலை கிழக்கு

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, கொழும்பு

09 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US