உயிருக்கு போராடும் அபிநய்க்கு உதவிய தனுஷ் - வாரி வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்காக அவதிப்படும் நண்பன் அபிநய்க்கு தனுஷ் பெருந்தொகை பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.
நடிகர் அபிநய்
தனுஷ் ஹீரோவாக அறிமுகமானவர் திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இதில் தனுஷ் ஒரு மாணவனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரின் நண்பனில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் அபிநய்.
படத்தின் ஹீரோவை காட்டிலும் மிகவும் ஸ்மார்டாகவும் அழகாகவும் இருப்பார் அபிநய். இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கட்டி வைத்துள்ளார்.
இந்த துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷை காட்டிலும் அபிநய்க்கு ரசிகர்கள் அதிகம். எது எப்படி இருந்தாலும் சமீப காலமாக அபிநய் உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
அபிநய்க்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யக் கூட பணமின்றி தவித்து வந்தார். அபிநய்யின் இந்த நிலை எப்படியோ கேபிஒய் பாலாவிற்கு தெரியவந்தது.
அவர் நேரில் சென்று அபிநய்க்கு ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்தார். அவர் செய்த இந்த எதிர்பாரா உதவியால் எமோஷனல் ஆன அபிநய், கண்ணீர் விட்டு அழுதார்.
ஆனால் இதன் பின்னர் தான் சமூக வலைத்தளங்களில் சில சலசலப்புக்கள் வர தொடங்கியது. அதாவது எந்தவித சம்பந்தமம் இல்லாத கேபிஒய் பாலா அவருக்கு 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
ஆனால் தனுஷ் நண்பனாக இருந்தும் ஏன் கொடுக்கவில்லை என தனுஷ்க்கு எதிராக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
கேபிஒய் பாலா தவிர அபிநய்க்கு பல பிரபலங்கள் உதவி செய்திருந்தனர். ஆனால் தனுஷ் உதவி செய்யவில்லை. இந்த நிலையில் தனுஷ் தற்போது அபிநய்க்கு உதவி தொகை கொடுத்துள்ளார்.
அபிநய்க்கு உதவி செய்த தனுஷ்
தனுஷை பலரும் சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கிறாரே அவர் ஏன் உதவி செய்யவில்லை உன்ற கேள்வி ரசிகர்களால் கேட்கப்பட்து. இது தனுஷ்க்கு தெரிய வந்ததொ அல்லது அவரே தானாக கொடுத்தாரோ தெரியவில்லை.
அபிநய்க்கு தனுஷ் மொத்தமாக 5 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளார். என்னதான் அபிநய்க்கு தனுஷ் லேட்டாக உதவி செய்தாலும் ஒரு பெருந்தொகையை கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், தனுஷ் லேட்டாக உதவினாலும் வெயிட்டாக கொடுத்திருக்கிறார் என பாராட்டி வருகின்றனர்.
அபிநய்க்கு இதுவரை யாரும் கொடுக்காத அளவு, மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவி இருக்கும் நடிகர் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |