உங்கள் வீட்டில் இந்த செடிகள் இருக்கா? அப்படி இருந்தால் இனி வளர்க்காதீர்கள்! ஜோதிடம் கூறும் அறிவுரை
வீடுகளில் வளர்க்கும் 6 செடிகளால் துரதிரஷ்டம் வரும் என சில செடிகளை ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளை அழகாக்கவும், வீட்டுத்தோட்டமாக மாற்றவும் சில செடிகளை வீட்டிற்குள் வீட்டிற்கு வெளியிலும் வளர்ப்பதுண்டு.
ஆனால் அவைதான் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் இந்த செடிகளை வீட்டில் வளர்க்கவே வளர்க்காதீர்கள்.
வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்
மருதாணிச் செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பரவுமாம். இது வீட்டின் மகிழ்ச்சியையும், அமைதியையும் மொத்தமாக அழிக்கிறது.
பேரீச்சை மரத்தை வீடுகளில் வளர்த்தால் அது வீட்டிற்கு தீமை விளைவிக்குமாம். மேலும், வீட்டில் பண குறையும். பணம் குறித்து பல சிக்கல்கள் ஏற்படுமாம்.
புளியமரத்தை வீட்டில் வளர்த்தால் அது எப்போதும் அச்சமான சூழலை உருவாக்குமாம். அதனால் வீட்டின் முற்றத்திலும் நடக்கூடாது. ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களின் கடனை அதிகரிக்கும். மேலும், நோய்களையும் அதிகரிக்க செய்யுமாம்.
பொதுவாக வீட்டில் முள் உள்ள செடிகளையும், மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஓரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வீட்டில் முள் இருக்கக்கூடிய கள்ளி செடிகளை வளர்க்கக் கூடாது. சிலபேர் இதனை அழகுக்காக வீட்டில் வளர்ப்பது உண்டு. ஆனால் இதனை வீடுகளில் வளர்ப்பதால் வீட்டில் பதட்டமான சூழல் உருவாகும். இத்தகைய தாவரங்கள் குடும்பத்தில் பரஸ்பர வேறுபாடுகளை ஏற்படுத்தும்.
வீட்டில் நடப்பட்ட செடிகள் காய்ந்து கொண்டிருந்தால், அவற்றை ரொம்ப அகற்றுவது நல்லது. வாஸ்து படி, காய்ந்த மரங்கள், தாவரங்கள் வீட்டில் துன்பத்தை கொண்டு வரும் ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.