வீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள் என்னென்ன? மீறி வளர்த்தால் என்ன விபரீதம் ஏற்படும்!
வீட்டின் அமைப்பை மட்டுமல்லாது, வீட்டில் எந்த மாரம், செடி, கொடிகளை வளர்க்கலாம், எவை வளர்க்கக்கூடாது என்பதை பார்ப்போம்...
முள் இருக்கக்கூடிய கள்ளிச் செடி போன்ற செடிகளை வீட்டில் எப்போதும் வளர்க்கக்கூடாது. அவை சிலர் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் என கருதியும் இதுபோன்ற செடிகளை வளர்ப்பதுண்டு.
ஆனால் வீட்டில் கள்ளி செடி போன்றவற்றை எப்போதும் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை நம் மனதிற்குச் சஞ்சலம், மன அழுத்தம் ஏற்படுத்தும். அதோடு வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தரக்கூடியது.
மேலும், முள் இருக்கும் செடியை வளர்ப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டை, சச்சரவுகளை உண்டாக்கும்.
மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடிய செடிகளை வீட்டின் தென் கிழக்கு பகுதியில் வைத்து வளர்க்கலாம். வீட்டின் வடகிழக்கு பகுதியில் இதுபோன்ற செடி, மரங்களை வைக்கக்கூடாது.
அதுமட்டுமின்றி, அதிர்ஷ்டமாக கருதப்படும் போன்சாய் மரம் வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம். ஆனால் வீட்டினுள் வளர்க்கக்கூடாது. வீட்டு வளாகத்தில் புளியமரத்தை வளர்க்கக்கூடாது.
அதுமட்டுமல்லாமல் புளியமரம் அருகில் வீடு கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரங்கள் காய்ந்து போயிருந்தால் அதை அவ்வப்போது அப்புறப்படுத்துவது அவசியம்.
அதே போல் வீட்டிலும், வீட்டு வளாகத்தில் வளர்க்கப்படும் தாவரங்கள் காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டை சுற்றி பருத்தி செடிகளை வளர்ப்பது நல்லதல்ல.
வீட்டின் வடக்கு பகுதியில் சிறிய செடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதே போல வீட்டின் முன்புறத்தில் உயர்ந்த மரங்களும், தடிமனான மரங்களை வளர்ப்பது கூடாது.
இது போன்ற தாவர வளர்ப்பு முறைகளை சரியாக கடைப்பிடித்தால் வீட்டில் அதிர்ஷ்டம் தேடி வரும். ஆரோக்கியமும் மேம்படும்.