தர்பூசணியுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?
தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி
கோடை காலங்களில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. நீர்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பழத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து இருப்பதால், கோடையினால் ஏற்படும் நீரிழப்பு தடுக்கப்படுவதுடன், உடலுக்கு ஆற்றலையும் அளிக்கின்றது.
வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம் சத்துக்களைக் கொண்டுள்ள தர்பூசணி, கோடை காலங்களில் சாப்பிட அருமையான பழமாகும். இதில் கலோரி மற்றும் கொலஸ்ட்ரால் சத்து குறைவு என்பதால் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் தர்பூசணி உடன் எந்தெந்த உணவினை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
நீர்ச்சத்து அதிகமாக உள்ள தர்பூசணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. தர்பூசணி வயிற்றில் உள்ள அமிலங்களை கரைய செய்கின்றது. ஆனால் தயிர் செரிமானமான அசிடிக் அமிலங்கள் தேவை என்பதால், செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு அஜீரண தொந்தரவு ஏற்படும்.
தயிரைப் போன்று பாலையும் தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவையும் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்துமாம்.

வாழைப்பழத்தினை தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. இரண்டும் வெவ்வோறு செரிமான விகிதங்களை கொண்டுள்ளதால், செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும்.
தர்பூசணி மற்றும் வெள்ளரி இவை ஒரே வகையைச் சேர்ந்த பழங்கள் என்றாலும் இவற்றினை சேர்த்து சாப்பிடுவது கூடாது. இரண்டிலும் ஒரே மாதிரியான நொதிகள் வயிறு தொந்தரவை ஏற்படுத்தும்.

கார்பனேட்டட் பானங்களை தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக மதுபானம் சாப்பிட்டு தர்பூசணி சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கப்படுவதுடன், இரைப்பை குடல் அசௌகரியம், அமில பிரச்சனை ஏற்படும்.
இதே போன்று ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை இவைகள் அசிடிக் தன்மை நிறைந்துள்ள பழங்கள் என்பதால் இவற்றையும் தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும்.

குளிர்ச்சியான தர்பூசணியுடன் காரணமான உணவுகளை சேர்த்து சாப்பிடுவது கூடாது. இரண்டிற்கும் செரிமானத்தில் முரண்பாடு காணப்படுவதுடன், கடுமையான நெஞ்செரிச்சல், வயிறு வலி, அஜீரணம் போன்ற பிரச்சனை ஏற்படும்.
முட்டை, சிக்கன் போன்ற புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இவை செரிமான கோளாறு, வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகின்றது.

தர்பூசணி ஏற்கனவே நீர்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதால் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது 30 அல்லது 45 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |