யாரும் அறிந்திடாத தமிழர்களின் அதிசயம் நிறைந்த கோவில்கள் - வாழ்வில் ஒரு முறையாவது சென்றுவிட வேண்டுமாம்!
பொதுவாக கோவில்கள் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக தான் கட்டப்பட்டிருக்கும். குறிப்பாக சில கோவில்கள் அதிக வலிமை உள்ள சக்திகளைப் பெற்று விளங்கும். அந்த கோவில்களை எல்லாம் கண்டுபிடிப்பது அனுபவம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்.
அந்த வகையில் ஒவ்வொரு கோவில்களிலும் என்னென்ன மாதிரியான சக்திகள் அதிசயங்கள் அடங்கியுள்ளது என கண்டறிய இங்கு தெரிந்துகொள்வோம்.

உற்சவ நந்திகேஸ்வரர்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார்.
இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.
ஏழு பாவத்தையும் போக்கி தலையெழுத்த மாற்றும் அதிசய கோவில்! விதி உள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியுமாம்...

மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும்.
அது போன்று வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும்.
இந்த அமைப்பு தான் அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

பொன்மலை நாதர்
திருவண்ணாமலையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் சென்றால், தேவிகாபுரம் என்ற ஊர் உள்ளது.
இங்கு பொன்மலை நாதர் என்ற கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள்.
காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் நடைபெறுவதும் உண்டு.

ஸ்ரீரங்கநாதப் பெருமாள்
108 திவ்ய தேசங்களில் முதன்மை கோயிலான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
கோவில் பூஜைக்கு தேங்காய் அழுகி இருந்தால் அபசகுணமா?

நடராசர் சுயம்பு
கும்பகோணத்தில் உள்ள நல்லம் ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன.
இவரை சற்று தூரத்திலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர்
விழுப்புரத்தை அடுத்து ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் என்ற ஆலயத்தில் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்.
அப்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தை காண முடியுமாம்.
மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவ்வளவு அதிசயமா? பலரும் அறிந்திடாத விடயம்

பகவதி அம்மன்
சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.
இந்த காட்சியின் போது காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும், உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள்.
இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் வாழ்வில் நினைத்தது நிறைவேறுமாம்.

ஆவுடையார் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை என்ற இடத்தில் உள்ள ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்குமாம்.
இந்த ஆலயத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு நடக்கும். பிற நாட்களில் கோயில் மூடியிருக்குமாம்.
எப்போதும் அணையாமல் எரியும் சுடர்! புரியாத புதிராக உள்ள அதிசய சிவன் கோவில்! ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள்

திருவையாறு
பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது.
சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

நூற்றியொரு சுவாமி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது.
இந்த அகல் விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மன அமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம்.
மேலும், இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது தான் இந்த அகல் விளக்கின் ஆச்சரியமே.
இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழைய தடை! மீறினால் பேராபத்து.... ஏன் தெரியுமா?

சிரட்டை பிள்ளையார் கோவில்
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.
இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.