ஏழு பாவத்தையும் போக்கி தலையெழுத்த மாற்றும் அதிசய கோவில்! விதி உள்ளவர்கள் மட்டுமே செல்லமுடியுமாம்...
வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கும் பலர் தான தர்மங்களை கொடுத்தும், கோவில்களுக்கு சென்றும் நிம்மதியை தேடி வருகின்றனர். ஆனாலும், சிலருக்கு கஷ்டங்கள் குறைந்த பாடில்லை, அப்படி இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வந்தால் நன்மை நடக்குமாம்... '
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
இந்த கோவில், திருச்சி அருகே திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோயில். இந்தியாவிலேயே மிக சொற்ப இடங்களில் இருக்கும் பிரம்ம தேவனுக்கான கோயில்களில் இது சிறப்பானதாகும்.
இந்த கோவிலுக்கு செல்ல திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிமீ தொலைவில் சிறுகனூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூர் கிராமம்.
இங்குள்ள பிரம்ம கோயிலுக்கு அப்படி ஒரு ஆற்றல். உங்கள் தலை எழுத்தை எழுதியவர் பிரம்மதேவர். அப்படியானால் அவர் தானே அதை மாற்ற வேண்டும் என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள்.
வெறும் வாய்வாக்காக அல்லாமல், இங்கு சென்றுவந்தவருக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என்கிறார்கள் அவர்கள். மேலும், இந்த கோயிலுக்கு செல்லவதே திட்டமிடமுடியாததாம். அதாவது நீங்கள் திட்டமிட்டு இந்த கோயிலுக்கு செல்வதென்பது நிகழவே நிகழாத ஒரு காரியம் என்கின்றனர்.
ஆனால், பிரம்மனின் ஆசி பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். பின்னர், இந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என்று விதி இருந்தால் மட்டும் உங்களால் இந்த கோயிலுக்கு செல்லமுடியுமாம்.

அந்த விதி உங்களுக்கு இந்த தகவலைக் கொண்டு சேர்க்கும் என்கிறார்கள் தீவிர பக்தர்கள். சிவனிடமிருந்து உலகை படைக்கும் ஆற்றலை பிரம்மன் பெற்றதாகவும், அதற்குள் அகந்தை தலைக்கேறிய பிரம்மன், சிவனையும் தன்னையும் சமமாக நினைத்து அவமதித்ததாகவும் நம்பிக்கை கதை உண்டு
இந்த கோவிலுக்கு சென்று பிரம்மனையும், சிவனையும் வழிபட்டால் உங்கள் தலையெழுத்து மாறி நல்ல நேரம் வரும் என்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். கோவிலானது, காலை 7.30மணியிலிருந்து மதியம் 12மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
சிறப்பு அம்சம்
பங்குனி மாதம் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். அந்த நேரத்தில் லிங்கத்தை தரிசிப்பது மிகவும் சிறந்தது.
இதனால் அவரது வாழ்க்கை மாறிப்போகும். அதே நேரத்தில் இதை அவ்வளவாக யாரும் தரிசித்தது கிடையாதாம். பேராசை கொண்டு தரிசிப்பவர்களுக்கு இருப்பதும் கெட்டுவிடும் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றனர் பக்தர்கள்... முடிந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்....