வைட்டமின் சி குறைபாட்டை போக்கும் Ascorbic Acid மாத்திரைகள்
நம் உடலுக்கு மிக மிக தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலத்துடன் வைப்பதே வைட்டமின் சி தான்.
இது நம் உடலில் குறையும் போது ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
மிக முக்கியமாக ஸ்கர்வி நோய் ஏற்பட வைட்டமின் சி குறைபாடே காரணம், எப்போதும் சோர்வாக இருப்பது, மூட்டுகளில் வலி, பற்களில் வலி, தோல் வியாதிகள் போன்றவை வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறிகளே.
இதை போக்குவதற்காக மருத்துவர்கள் Ascorbic Acid மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Ascorbic Acid மாத்திரைகளளை எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுக்கவும். இதை மொன்றோ, கடித்தோ சாப்பிட வேண்டாம், அப்படியே விழுங்கிவிடவும்.
ஒருவேளை பவுடர் வடிவில் இருந்தால், அதில் குறிப்பிட்டப்பட்ட அளவு தண்ணீரில் கரைத்துவிட்டு சாப்பிடவும், மருத்துவர்கள் பரிந்துரைக்ககும் நாட்கள் முழுமையும் எடுத்துக் கொள்ளவும்.
சுயமாகவே நீங்களாக நிறுத்திவிட வேண்டாம்.
பக்கவிளைவுகள்
வயிற்றுப்போக்கு
வாந்தி
அடிவயிற்றில் வலி
நெஞ்செரிச்சல்
மயக்கம்
இது பொதுவான பக்கவிளைவுகளே, இது தொடர்ந்தாலோ, கடுமையானதாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
இதுதவிர சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி, ரத்தத்துடன் கூடிய சிறுநீர் இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கடுமையான குறிப்பிடும்படியான பக்கவிளைவுகள் இல்லையென்றாலும் தொந்தரவுகள் நீடிக்கும்பட்சத்தில் மருத்துவரை பார்க்கவும்.
முக்கிய கவனத்திற்கு
வேர்க்கடலை, சோயா போன்றவற்றில் உங்களுக்கு அலர்ஜி இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
சிறுநீரக நோயாளியாக இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும், மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோன்று தாய்ப்பாலூட்டும் பெண்களும் பரிந்துரைக்கும் அளவுகளில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை Ascorbic Acid மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நாட்களில் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாய சூழல் இருந்தால் குளுக்கோஸ் அளவுகளில் மாறுதல்கள் உண்டாகும், இதை கவனத்தில் எடுக்கவும்.
குறிப்பு- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானதே!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |