ஆல்யாவுடன் கியூட்டாக கண்ணாமூச்சி விளையாடிய அர்ஷ்: எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க!
ஆல்யா மானசா தன்னுடைய மகன் அர்ஷ் உடன் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரான ராஜா ராணி சீரியலில் “செம்பா” கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமான நடிகை தான் ஆல்யா மானசா.
இவரின் நடிப்பு, ஒன்று தெரியாத மருமகள் போல் ராஜா ராணி சீரியலில் அட்டகாசமாக இருக்கும், பட்டித்தெட்டியெங்கும் செம்பா என்றால் தெரியாதவர் என்று யாரும் இருக்க முடியாத அளவிற்கு பிரபலமானார்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் டான்ஸாராகவும் இருந்த காரணத்தினால் செம்பாவிற்கு சின்னத்திரையில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஐலா எனும் பெண் குழந்தையும் , அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றாலும் ஆல்யாவின் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறது.
தற்போது சன் டிவியில் “ இனியா” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மகனிடம் அறை வாங்கிய ஆல்யா
இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபல நடிகர்களாக திகழ்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் தங்களுடைய வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குழந்தைகளுடன் விளையாடும் காட்சி என வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில், குழந்தைகளுடன் விளையாடும் போது ஆல்யாவின் மகன் ஆல்யாவை கதைக்க விடாமல் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது அடியை வாங்கிக் கொண்டு ஆல்யாவும் பேசாமல் இருக்கிறார்.
தொடர்ந்து சஞ்சீவ், சஞ்சீவ் - ஆல்யா போன்று ஐலா - அர்ஷ் என்ற யூடியூப் சேனல் புதிதாக ஆரம்பிக்க போவதாக திட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோக்காட்சியை பார்க்கும் போது காதல் திருமணம் செய்துக் கொண்டால் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்களும் இதே தான் தங்களின் கருத்தாக பகிர்ந்து வருகிறார்கள்.