ஆல்யா மானசா தன் மகனுக்கு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு என்ன தெரியுமா?
ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
டிரெண்டிங் ஜோடி
ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ்- ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெற்றோரை எதிர்த்து சஞ்சீவை கரம்பிடித்தார் ஆல்யா மானசா.
இவர்களுக்கு அல்யா என்ற மகள் இருக்கிறார், முதல் குழந்தை பிறந்த சில மாதங்கள் ஓய்வில் இருந்த ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடர் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மீண்டும் கர்ப்பமான ஆல்யா
வெற்றிகரமாக சீரியல் சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் கர்ப்பமானார் ஆல்யா.
நிறைமாதம் வரை நடித்துக் கொண்டிருந்த ஆல்யா, பிரசவ நேரம் நெருங்கியதும் சீரியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நேற்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார், இத்தகவலை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
தன் மகனை கையில் ஏந்தியபடி சஞ்சீவ் பதிவிட்ட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
நெகிழ்ச்சியான முதல் பரிசு
இந்நிலையில் மகன் பிறந்த முதல் நாளிலேயே நெகிழ்ச்சியான பரிசொன்றை அளித்துள்ளனர் ஆல்யா- சஞ்சீவ் தம்பதி.
அதாவது ஆல்யாவின் நிறைமாத வயிற்றை அப்படியே பரிசாக அளித்துள்ளனர், அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சஞ்சீவ்.
ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?