கருவை கலைக்க நாடகம் ஆடுகிறாள் திவ்யா: அர்னவ் போலீஸ் முறைப்பாடு
கருவை கலைப்பதற்காக நடிகை திவ்யா நாடகம் ஆடுவதாக தெரிவித்துள்ளார் அர்ணவ்.
இரண்டாவது திருமணம்
பெங்களூரை சேர்ந்த திவ்யாவுக்கு, திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கிறது.
இவர் மகராசி, செவ்வந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் நடித்த அர்னவ் உடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.
அர்னவ் இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்காக திவ்யா மதம் மாறி திருமணம் முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்து முறைப்படி திருமணமும் நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் திவ்யா கர்ப்பமாகி இருக்கிறார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் அர்னவ் தற்போது திவ்யாவை விட்டு வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அர்னவ் தன்னை தாக்கியதில் தனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது வீடு வாங்கிய நிலையில் அதற்கான இஎம்ஐ திவ்யா தான் கட்டினாராம். திவ்யாவை அர்னவ் தாக்கும்போது அவர் தற்போது தொடர்பில் இருக்கும் பெண்ணும் லைவ்வில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்கிறார். pic.twitter.com/DxyUY7HuyT
ஆதாரம்
இதனையடுத்து அர்னவ் சென்னை ஆவடி காவல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டில், திவ்யா வீடியோவில் சொன்னது சுத்த பொய், நான் அங்கு இல்லை என்பதற்கு சிசிடிவி ஆதாரம் இருக்கிறது எனவும் கருவை கலைக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் எனவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது குறித்து போலீஸார் கவனம் செலுத்தி வருகிறார்கள்.