இது புது காதல் ஜோடி...அடடா ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்கே!
அர்ஜூன் தாஸ் 'கைதி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரது குரலுக்கு பல ரசிகர்கள் காணப்படுகிறார்கள்.
இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமியை காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
இருந்தாலும் இதுகுறித்து அவர்கள் இருவருமே எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
image - pintetest
இந்நிலையில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் தொகுப்பாளர் அர்ஜூன் தாஸிடம் உங்களுக்கு காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா? என்று கேள்வி கேட்டபோது, திருமணம் வேண்டாம் என பதிலளித்துள்ளார்.
உடனே ஐஸ்வர்யா லட்சுமி வெட்கப்பட்டு சிரித்துள்ளார். எனவே இதனைப் பார்த்தவர்கள், ஐஸ்வர்யா லட்சுமியின் வெட்கத்தைப் பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையிலான காதல் வெளிப்படுகின்றது என்று கூறுகின்றனர்.
இது உண்மையா? இல்லையா? என்பதை அவர்கள் இருவரும் தான் கூற வேண்டும்.
image - mallurpost