நான் பேசியதைக் கேட்டு விக்ரம் சார் கடுப்பாகி எழுந்து போய்விட்டார் - ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்
நான் பேசியதைக் கேட்டு விக்ரம் சார் கடுப்பாகி எழுந்து போய்விட்டார் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படம் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அசத்தினார்.
இவர் பேசும் ஈழத் தமிழைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே வியந்துபோனார்கள். 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தன் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக் நேற்று ‘பொன்னியின் செல்வன் -2’ படம் உலகம் முழுவதும் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி த்ரிஷா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஐ லவ் யூ த்ரிஷா..., த்ரிஷா தனிப்பட்ட முறையிலும் சரி, வெளி இடத்திலும் சரி ரொம்ப அழகாக பழகக் கூடியவர். ரொம்ப நல்ல கரெக்டர். அவரிடம் நான் அடிக்கடி கேட்பேன் எப்படி இப்படி அழகாக இருக்கீங்க... உங்க சீக்ரெட் எனக்கு சொல்லுங்களேன்.. என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இப்படி நான் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட விக்ரம் சார்... கடுப்பாகி எழுந்து போய் விடுவார்... இவங்க கிட்ட இருக்க முடியாது என்று. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த மணிரத்னம் சாருக்கு ரொம்ப நன்றி... என்றார்.