நெய் சோறுக்காக பள்ளிக்கு போவோம்.. பழைய காலத்து அனுபவத்தை பகிர்ந்தப்படி சாப்பாடு தானம் செய்த பிரபலம்!
நோன்பு தினத்தை முன்னிட்டு 70 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கிய அறந்தாங்கி நிஷா வின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளது.
மீடியா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'கலக்க போவது யாரு' என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் அறந்தாங்கி நிஷா.
நிஷாவின் முயற்சியால் தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளத்திரைக்கு சென்று விட்டார். தனுஸ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன் நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது, அதிலும் கலக்கியுள்ளார்.
77 பேருக்கு பிரியாணி
இந்த நிலையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் வீடுகளில் நடக்கும் முக்கியமான விடயங்களை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நோன்பு தினத்தை முன்னிட்டு தொழுவதற்கு வருவோருக்கு சுமார் 77 பிரியாணி சாப்பாடு கொடுக்க போவதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த அறந்தாங்கி நிஷாவின் ரசிகர்கள், இவ்வளவு பெரிய மனதா உங்களுக்கு” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.