பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம்...அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் டிவி! இப்படி ஒரு திடீர் மாற்றமா?
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் புதிய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அறிய வாய்ப்பு
பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகின்றார்களாம்.
தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
அதே சமயம் டிஸ்னி பிளஸ் ஸ்டார் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.