பிக்பாஸ் சம்பளத்தில் புதிய பங்களாவா? அறந்தாங்கி நிஷா கொடுத்த ஷாக்
அறந்தாங்கி நிஷா தன்னை பற்றி வந்த ஒரு வதந்திக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா
பிரபல ரிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. பெரும்பாலான காமெடி ஷோக்களில் அவரை பார்த்துவிடலாம். மேலும் அவர் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பேச்சாளராக இருந்து வருகிறார்.
நிஷா பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் 70 நாட்கள் அவரை தாக்குப்பிடித்தார். அதற்கு பிறகு வழக்கம் போல அவர் பிரபல ரிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.
பங்களா கட்டி இருக்கிறாரா?
இந்நிலையில் நிஷா பிக் பாஸ் மற்றும் பிரபல ரிவியில் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரிய பங்களா கட்டி இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கும் அறந்தாங்கி நிஷா கூறி இருப்பதாவது, "அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க, இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்... சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ" என தெரிவித்து இருக்கிறார்.