அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிஷாவுக்கே இந்த பரிதாப நிலையா?
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிஷா, பட்டிமன்ற பேச்சாளர் ஆவார்.
தன்னுடைய நகைச்சுவை பேச்சு திறமையாலும், அழகான முக பாவனைகளாலும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.
தொடர்ந்து விஜய் டிவியின் முக்கிய பிரபலமாக வலம்வந்த நிஷா, கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அர்ச்சனாவின் அன்பு கேங்கில் இணைந்து கொண்டு, தன்னுடைய திறமையையே தொலைத்துவிட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
ஒருகட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிஷாவுக்கு எதிராக கடுமையான கமெண்டுகளும் பறந்தன.
இதுபற்றி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பேசுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு நெருக்கமானவர்களே என்னை அவாயிட் செய்தனர். நான் ஒரு லூசு மாறி சுத்திட்டு இருந்தேன் . என்னைப்பத்தி ஏகப்பட்ட நெகடிவ் கிண்டல்கள் என கூறியுள்ளார்.
இந்த ப்ரோமோ நிஷாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.