பெண்களை வலை விரித்து பிடிக்கும் ஆண்கள் பிறந்த தேதி.. எண்கணிதம் சொல்வது என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த ஆண்கள் பெண்களை வலை விரித்து கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அப்படியான ஆண்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 1 பிறந்தவர்கள்
12 மாதங்களில் 1, 10, 19 மற்றும் 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண்ணாக 1 இருக்கும். இவர்கள் தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள புத்திசாலித்தனம் இவர்களை தனியொரு ஆளாக காட்டும். இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் எப்படியான பெண்களையும் கவர்ந்து விடுவார்கள்.
எண் 3 பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும், 3, 12, 21 அல்லது 30 தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண்ணாக 3 என்ற எண் இருக்கும். இவர்கள் வேடிக்கையானவர்கள், புத்திசாலிகள் மற்றும் ஞானிகளாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் மற்றவர்களின் இதயங்களில் இடம்பிடிப்பார்கள். இதயங்களை வெல்லும் கலை இருக்கும். இதனால் பெண்களை இலகுவாக மடக்கி விடுவார்கள்.
எண் 5 பிறந்தவர்கள்
5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண்ணாக 5 என்ற எண் இருக்கும். இவர்கள் சுறுசுறுப்பாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் திகழ்வார்கள். இது போன்ற பண்புகள் பெண்களை அதிகமாக ஈர்க்கும்.
எண் 6 பிறந்தவர்கள்
6 ஆம் எண்ணை ரேடிக்ஸ் எண்ணாக கொண்டவர்கள் எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்திருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு சிறியவர்கள் போன்று இருந்தாலும் காதல், அழகு மற்றும் கலையுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.
எண் 9 பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பார்கள். இந்த வகை நபர்களையும் பெண்கள் அதிகம் விரும்புவார்களாம். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |