விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்! நூலிழையில் உயிர் தப்பிய புகைப்படம்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.அமீன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தற்போது இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார். அவர் சொந்தமாக பாடல்கள் கம்போஸ் செய்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் பங்கேற்று இருந்தபோது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பி இருக்கிறார்.
விபத்து
கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென கீழே வந்த விழுந்திருக்கிறது.
"நான் நடுவில் தான் நின்று இருந்தேன். சில நொடிகள் முன் அல்லது பின்னர் அது விழுந்திருந்தால் எங்கள் தலையில் தான் விழுந்து இருக்கும். மொத்த டீமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என அமீன் குறிப்பிட்டு இருக்கிறார்.